Friday, 11 November 2016

10. ஆதாம் முதல் யாக்கோபு வரை வாழ்ந்தவர்களின் தொடர் ஆண்டுகளின் விவரங்கள்

          கடவுள் உலகத்தை படைக்கும் போது 6ஆம் நாளில் இந்த மண்ணிலிருந்து மண்ணை எடுத்து தன் சாயலாக மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊதி, மனிதனுக்கு உயிர் கொடுத்து மானிடர் போல் உருவாக்கினார். மானிடர் என்பது ஆதாம் என்று எபிரேய பாடம்(தொடக்க நூல் 1:27 / அடிக்குறிப்பு).

          கடவுள் ஆதாமை படைக்கும் போது, ஒரு குழந்தையாகவோ அல்லது சிறு வயது சிறுவன் போலவோ நிச்சியமாக படைக்கவில்லை. ஆனால், ஒரு இளைஞனைப் போலதான் படைத்தார். ஆனால் ஆதாமின் இளமை பருவ வயதை குறிப்பிட்டு கூற இயலாது. ஆதலால் கடவுள் உலகத்தை படைத்த 6ஆம் நாள் சனிக்கிழமை முதல், மொத்தம் 930 ஆண்டுகள் வரை ஆதாம் வாழ்ந்து மரித்தார்.

          ஆதாமுக்கு 130ஆம் வயதில், அவருடைய மனைவி ஏவாள் சேத்து என்ற ஆண் மகனை பெற்று தந்தார். இதுவே உலகத்தின் மனித வாழ்நாட்கள் 6ஆம் நாள் தொடங்கி சேத்து பிறந்த ஆண்டான 130ஆம் ஆண்டிலிருந்துதான் உலகத்தின் மனித பிறவியின் தொடர் ஆண்டுகள் தொடங்குகின்றன. இதன் அடிப்படையில் ஆதாம் முதல் யாக்கோபின் இறப்பு ஆண்டுகள் வரை மொத்தம் 2253 ஆண்டுகள் ஆகும். இதன் முழு விவரங்கள் அட்டவணையாக பின்வருமாறு:

. எண்
தந்தை பெயர்
மகன் பிறக்கும் போது வயது
தொடர் ஆண்டுகள்
மீதமுள்ள வயது
இறக்கும் போது வயது
1
ஆதாம்
130
130
800
930
2
சேத்து
105
235
807
912
3
ஏனோசு
90
325
815
905
4
கேனான்
70
395
840
910
5
மகலலேல்
65
460
830
895
6
ஏரேது
162
622
800
962
7
ஏனோக்கு
65
687
300
365
8
மெத்துசேலா
187
874
782
969
9
இலாமேக்கு
182
1056
595
777
10
நோவா**
500
1556
450
950
11
சேம்**
100
1656 (+2)
500
600
12
அர்பகசாது
35
1691 (+2)
403
438
13
செலாகு
30
1721 (+2)
403
433
14
ஏபேர்
34
1755 (+2)
430
464
15
பெலேகு
30
1785 (+2)
209
239
16
இரயு
32
1817 (+2)
207
239
17
செரூகு
30
1847 (+2)
200
230
18
நாகோர்
29
1876 (+2)
119
148
19
தெராகு
70
1946 (+2)
135
205
20
அபிரகாம்
100
2046 (+2)
75
175
21
ஈசாக்கு
60
2106 (+2)
120
180
22
யாக்கோபு
--
--
--
147

யாக்கோபு
--
2106+147 = 2253 (+2)
--
--

**முக்கிய குறிப்பு:-

10ஆவது தலைமுறை நோவாவையும் 11ஆவது தலைமுறை சேமையும் குறித்து மறைநூலில் உள்ள வசனத்தின்படி, வெள்ளப்பெருக்கிற்கு பின்பு, 11ஆவது தலைமுறையான சேமின் வாழ்நாளில் 2 வருடம் வித்தியாசம் உள்ளது. அந்த வசனங்கள் பின்வருவன -

தொடக்க நூல் - 5:32 - நோவாவிற்கு 500 வயதான போது, அவருக்கு சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.

தொடக்க நூல் - 7:11 - நோவாவின் வாழ்க்கையில் 600ஆம் ஆண்டின் 2ஆம் மாதத்தில் 17ஆம் நாளன்று பேராழத்தின் உற்றுகள் பீறிட்டெழுந்தன. வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன (அப்பொழுது சேமுக்கு 100 வயதாகும்).

தொடக்க நூல் - 8:13 - அவருக்கு 601 வயதான ஆண்டில் முதல் மாதத்தில், முதல் நாளில் மண்ணுலக பரப்பில் இருந்து வெள்ளம் வற்றியது (அப்பொழுது சேமுக்கு 101 வயதாகும்).

தொடக்க நூல் - 11:10 & 11 - வெள்ளப் பெருக்கிற்கு 2 ஆண்டுகளுக்குப் பின், சேம் 100 வயதாக இருக்கும் போது, அவனுக்கு அர்பகசாது பிறந்தான். அர்பகசாது பிறந்த பின்பு, சேம் 500 ஆண்டுகள் வாழ்ந்தான் (அப்பொழுது சேமுக்கு 102 வயதாகும். அவர் மொத்தம் 502 ஆண்டுகள் வாழ்ந்தார்).

விளக்கம்:-
மேற்கூறிய வசனங்களின் படி, நன்கு ஆய்வு செய்து, மறைநூலில் உள்ள வசனங்களின் படியே எந்தவித மாற்றமும் இன்றி இந்த ஆய்வை முடிக்க வேண்டுமென்று அந்த வித்தியாசமுள்ள 2 ஆண்டுகள் பிரித்து ஆய்வு செய்யப்பட்டன.

முக்கிய குறிப்பு:-

Iதொடக்க நூல் - 47:28 - யாக்கோபு 17 ஆண்டுகள் எகிப்து நாட்டில் இருந்தார். அவருடைய வாழ்நாள் மொத்தம் 147 ஆண்டுகள்.
யாக்கோபு தன் குடும்பத்தோடு எகிப்து நாட்டில் குடியேறும்போது அவருக்கு வயது 130. அதன்பிறகு 17 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்து மரித்தார் (130 + 17 = 147).

மேற்கூறிய ஆதாம் முதல் யாக்கோபு வரை வாழ்ந்தவர்களின் தொடர் ஆண்டுகளின் இறுதியாக யாக்கோபின் வாழ்நாட்கள் 147 ஆண்டுகளாகும். யாக்கோபு தன் குடும்பத்தோடு எகிப்தில் குடியேறிய போது அவருடைய வயது 130 ஆகும். எனவே ஆதாம் முதல் யாக்கோபு எகிப்தில் குடியேறிய ஆண்டு வரை மொத்த தொடர் ஆண்டுகள் 2,236 ஆகும் [(ஈசாக்கு) - 2,106 + 130 = 2,236(+2)]

IIவிடுதலைப் பயணம் - 12:40 - எகிப்தில் குடியிருந்த இஸ்ரேல் மக்கள் அங்கு வாழ்ந்த காலம் 430 ஆண்டுகள்.

விடுதலைப் பயணம் - 12:41 - 430ஆம் ஆண்டு முடிவு பெற்ற அதே நாளில் ஆண்டவரின் படைத்திரள் எல்லாம் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறியது.

இஸ்ரேயல் மக்கள் எகிப்து நாட்டில் 430 ஆண்டுகள் அடிமை வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த போது கடவுள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டு, அவர்கள் மீது பரிவு கொண்டு, 430ஆம் ஆண்டு முடிவு பெற்ற அதே நாளில் எகிப்து நாட்டிலிருந்து விடுதலை அளித்து அழைத்து வந்தார்.

எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரேயல் மக்கள் விடுதலைப் பெற்று 430ஆம் ஆண்டு முடிவுபெற்ற அதே நாளில், ஆதாமிலிருந்து தொடர் ஆண்டுகள் மொத்தம் 2,666 ஆகும் [2,236 + 430 = 2,666 (+2)].

III. எண்ணிக்கை - 1:1இஸ்ரேயலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய 2ஆம் ஆண்டு, 2ஆம் மாதம், முதல் நாளன்று சீனாய் பாலை நிலததில் சந்திப்பு கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் பேசினார்.

இஸ்ரேயல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய 2ஆம் ஆண்டு, 2ஆம் மாதம், முதல் நாளன்று சீனாய் பாலை நிலத்தில் சந்திப்பு கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் இஸ்ரேல் மக்கள் கூட்டமைப்பில் உள்ள மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கையின்படி தலைகட்டு வாரியாக கணக்கெடுங்கள் என்று கூறினார்.

இஸ்ரேயலர்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய 2ஆம் ஆண்டு சீனாய் பாலை நிலத்தில் சந்திப்பு கூடாரத்தில் மோசேவுடன் கடவுள் பேசிய ஆண்டு வரை மொத்த தொடர் ஆண்டுகள் 2,668 ஆகும் [2666 +2 = 2668 (+2)].


IV. விடுதலைப் பயணம் - 7:7 - பார்வோனிடம் பேச்சு வார்த்தை நடத்தியபோது மோசேவுக்கு வயது 80.

விடுதலைப் பயணம் - 13:4 - ஆபியூ மாதத்தின் இந்த நாளில் நீங்கள் வெளியேறிச் செல்கிறீர்கள்.

இணைச்சட்டம் - 2:14 - காதேசு - பர்னேயாவினின்று புறப்பட்டுச் செரேது ஓடையைக் கடப்பதற்கான காலம் 38 ஆண்டுகள்

இணைச்சட்டம் - 1:3 - இஸரேல் மக்களுக்கென ஆண்டவர் கட்டளையிட்ட யாவற்றையும் 40ஆவது ஆண்டின் 11ஆம் திங்கள் முதல் நாளன்று மோசே அவர்களுக்கு உரைத்தார்.

இணைச்சட்டம்-1:5: யோர்தானுக்கு அப்பால் மோவாபு நாட்டில் பின்வரும் இந்தச் சட்டங்களை மோசே எடுத்துரைத்தார்.

இணைச்சட்டம் - 31:2: அவர் சொன்னது: இன்று எனக்கு வயது 120. இனி என்னால் நடமாட இயலாது. மேலும், "நீ யோர்தானைக் கடக்கமாட்டாய்" என்று, ஆண்டவர் எனக்கு கூறியுள்ளார்.

இணைச்சட்டம் - 34:5: எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார்.

மோசேவுக்கு 80 வயதாக இருக்கும் போது எகிப்து மன்னனிடம் தோராயமாக 25 நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தி(விடுதலைப் பயணம் - 6:28-30 & அதிகாரங்கள் 7, 8 , 9, 10 11 & 12:1-32) ஆபியூ மாதத்தில் எகிப்திலிருந்து வெளியேறி, காதேசு - பர்னேயாவினின்று புறப்பட்டுச் செரேது ஓடையை 38 ஆண்டுகள் பயணம் செய்து, மோவாபு நாட்டிற்கு வந்தனர். அதாவது மோவாபு நாட்டில் 40ஆவது ஆண்டில் 11ஆம் திங்கள் முதல் நாளன்று இஸ்ரேல் மக்கள் முன்னிலையில் ஆண்டவர் கட்டளையிட்ட யாவற்றையும் உரைத்தார். அந்த ஆண்டில் மோசேவுக்கு வயது 120 ஆகும். அதே மோவாபு நாட்டிலேயே அவர் இறந்தார்.

கடவுள் ஆதாமை படைத்த 6ஆம் நாள் முதல், இஸரேல் மக்களுக்கென ஆண்டவர் கட்டளையிட்ட யாவற்றையும் மோவாபு நாட்டில் மோசே உரைத்த 40ஆவது ஆண்டு வரை, உலகத்தின் மனித பிறவியின் தொடர் ஆண்டுகள் மொத்தம் 2,706 (+2) ஆகும்.

V. திருத்தூதர் பணிகள் 13:19-20 - அவர் கானான் நாட்டின் மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய 450 ஆண்டுகள் உரிமை சொத்தாக அளித்தார்; அதன் பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம் வரை அவர்களுக்கு நீதிதலைவர்களை அளித்தார்.


இந்த ஆய்வின்படி, கடவுள் ஆதாமை படைத்த 6ஆம் நாள் முதல் கானான் நாட்டில் வாழ்ந்த ஆண்டுகள் வரை ஏறக்குறைய 3156 (+2) {2,706 + 450 = 3,156} ஆகும். 

1 comment:

  1. I had studied about the people were blessed by the God and prepared a theses "The age of the World"from 1999 to 2003.The life span of blessed people where not mentioned in the bible.So there is no accuracy to find/ calculate "The age of the world/Universe".In the bible we found God created the man.God had spoken with Adam and Eve.Which was/is that language.No one knows.But some examiners said Adamic languge was the first language.So God literated the Adamic language to Adam.Then Aramic language....and other languages were formed.It is also by the God.How?During the construction of Babel Tower the people were thrown by the God to all over the World and made them to speak different languages.Before that all were spoken one language only, it may Adamic.So Adamic language was/is the basic for all languages formation or creations.Some person will raise the question.Can God speake all languages.Yes. God wil speak all languages.In all languages which is the best language?.English is best language,since it has 26 letters only.So God is Great.
    S.Xavierraj.BE.
    9994752581
    635703139890
    TamilNadu
    India.

    ReplyDelete