Sunday, 6 November 2016

5. ஆதாம் முதல் நோவா வரை மறைநூலில் உள்ள தலைமுறை பற்றிய வசனங்கள்.



தொடக்க நூல் - 5:3 – 32

3. ஆதாமுக்கு 130 வயதானபோது அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு சேத்து என்று பெயரிட்டான்.

4. சேத்து பிறந்தபின் ஆதாம் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

5. மொத்தம் 930 ஆண்டுகள் வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான்.

6. சேத்துக்கு 105 வயதானபோது அவனுக்கு ஏனோசு பிறந்தான்.

7. ஏனோசு பிறந்தபின் சேத்து 807ஆண்டுகள் வாழ்ந்தான். சேத்துக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

8. மொத்தம் 912 ஆண்டுகள் வாழ்ந்தபின் சேத்து இறந்தான்.

9. ஏனோசுக்குத் 90 வயதான போது அவனுக்கு கேனான் பிறந்தான்.

10. கேனான் பிறந்தபின் ஏனோசு 815 ஆண்டுகள் வாழ்ந்தான். கேனானுக்கு புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

11. மொத்தம் 905 ஆண்டுகள் வாழ்ந்தபின் ஏனோசு இறந்தான்.

12. கேனானுக்கு 70வயதானபோது, அவனுக்கு மகலலேல் பிறந்தான்.

13. மகலலேல் பிறந்தபின் கேனான் 840 ஆண்டுகள் வாழ்ந்தான்.  கேனானுக்கு புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

14. மொத்தம் 910 ஆண்டுகள் வாழ்ந்தபின் கேனான் இறந்தான்.

15. மகலலேலுக்கு 65 வயதான போது, அவனுக்கு எரேது பிறந்தான்.

16. எரேது பிறந்தபின் மகல்லேல் 830 முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான்.  மகல்லேலுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

17. மொத்தம் 895ஆண்டுகள் வாழ்ந்தபின் மகலலேல் இறந்தான்.

18. ஏரேதுக்கு 162 வயதானபோது, அவனுக்கு ஏனோக்கு பிறந்தான்.

19. ஏனோக்கு பிறந்தபின் ஏரேது 800 ஆண்டுகள் வாழ்ந்தான். ஏரேதுக்கு புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

20. மொத்தம் 962 ஆண்டுகள் வாழ்ந்தபின் ஏரேது இறந்தான்.

21. ஏனோக்குக்கு 65 வயதான போது, அவனுக்கு மெத்துசேலா பிறந்தான்.

22. மெத்துசேலா பிறந்தபின், ஏனோக்கு 300 ஆண்டுகள் கடவுளோடு நடந்தான். ஏனோக்கிற்குப் புதல்வரும், புதல்வியரும் பிறந்தனர்.

23. ஏனோக்கு மொத்தம் 365 ஆண்டுகள் வாழ்ந்தான்.

24. ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு, அவனைக் காணவில்லை. ஏனெனில், கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்.

25. மெத்தசேலாவுக்கு 187 வயதானபோது அவனுக்கு இலாமேக்கு பிறந்தான்.

26. இலாமேக்கு பிறந்தபின், மெத்துசேலா 782 ஆண்டுகள் வாழ்ந்தான். மெத்தசேலாவுக்கு புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

27. மெத்தசேலா மொத்தம் 969 ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.

28. இலாமேக்கிற்கு 182வயதானபோது, அவனுக்கு மகன் ஒருவன் பிறந்தான்.

29. அவன், "ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறுதல் அளிப்பான்" என்று சொல்லி அவனுக்கு 'நோவா' என்று பெயரிட்டான்.

30. நோவா பிறந்தபின் இலாமேக்கு 595 ஆண்டுகள் வாழ்ந்தான். இலாமேக்கிற்குப் புதல்வரும், புதல்வியரும் பிறந்தனர்.

31. இலாமேக்கு மொத்தம் 777 ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தான்.

32. நோவாவிற்கு 500 வயதானபோது, அவருக்கு சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.


தொடக்கநூல் - 7:11

11. நோவாவின் வாழ்கையின் 600ஆம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் பதினேழாம் நாளன்று பேராழத்தின் ஊற்றுகள் எல்லாம் பீறிட்டெழுந்தன. வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன.


தொடக்கநூல் - 8: 13 & 14

13. அவருக்கு 601 வயதான ஆண்டின் முதல் மாதத்தில் முதல் நாளில் மண்ணுலகப்பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா பேழையின் மேற்கூறையைத் திறந்து பார்த்தார். இதோ! நிலமெல்லாம் உலர்ந்திருந்தது.

14. இரண்டாம் மாதத்தின் இருபத்தேழாம் நாளில் மண்ணுலகில் நீர் வற்றியிருந்தது.


தொடக்கநூல் - 9:28 & 29

28. வெள்ளப்பெருக்குக்குப் பின்னர், நோவா 350 ஆண்டுகள் வாழ்ந்தார்.

29. இவ்வாறு, நோவா 950 ஆண்டுகள் வாழ்ந்தப்பின் இறந்தார்.

No comments:

Post a Comment