Sunday, 6 November 2016

1. முன்னுரை


படைகளின் ஆண்டவராகிய தந்தையும்,
தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கும் இறைமகனும்,
அவருடைய ஆவியான தூய ஆவியாரின் பெயரால் - ஆமென்.

அன்புடையீர்,

ஆதாம் முதல் இறைமகன் இயேசு வரை உள்ள தலைமுறைகளின் பட்டியலை, வெளியிடுவதற்கு தகுந்த ஞானத்தை தந்த தூய ஆவியாருக்கு தாழ்ந்து பணிந்து என் முதற்கண் வணக்கத்தையும், நன்றியையும் செலுத்திக் கொள்ளுகிறேன்.

ஆதாம் முதல் இறைமகன் இயேசுவின் தலைமுறை பட்டியல் வரை முழுக்க முழுக்க கதோலிக்க வேதாகம மறைநூலில் இருந்து ஆய்வு செய்து தயாரித்துள்ளேன். இந்த ஆய்வில் நான் வேறு எந்த கிறிஸ்துவ மறைநூல்களிலிருந்தோ, கிறிஸ்துவ ஆன்மீக புத்தகங்களிலிருந்தோ, வேறு எந்த கிறிஸ்துவ மறைநூல் அறிஞர்கள், ஆயர்கள், குருக்கள், மறைநூலில் சிறந்தொழுகும் பொது நிலையினர்கள் மற்றும் குருகுல பேராசிரியர்கள் போன்ற எவரிடத்திலும் இந்த ஆய்வை குறித்து ஆலோசனைகள், உதவிகள் ஏதுமின்றி தூய ஆவியார் எனக்களித்த ஞானத்தின்படி, கத்தோலிக்க வேதாகம மறைநூலில் இருந்து, நானே ஆராய்ச்சி செய்து, அனைத்து குறிப்புகள், விவரங்கள், மறைநூலில் உள்ள அதிகாரங்கள், வசனங்கள் போன்ற ஆதாரத்தோடு தயாரித்து இங்கு வெளியிட்டுள்ளேன்.

இந்த ஆய்வின் மையக்கருத்து, ஆதாம் முதல் இறைமகன் இயேசு வரை உள்ள தலைமுறையினரின் விவரங்களை பட்டியல் செய்து, உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் பார்த்து அறிந்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.(மிக விரைவில் இந்த ஆய்வு அறிக்கையை தமிழ் மொழியில் இருந்து ஆங்கில மொழியில் மொழி பெயர்ப்பு செய்து வலைதளத்தில் வெளியிட உள்ளேன்).

இந்த ஆய்வு அறிக்கையை படிக்கும் அனைவரும் தங்களது கருத்துக்கள், எதிர் கருத்துக்கள் அல்லது ஆலோசனைகளை தெரிவிக்க விரும்பினால் இந்த வலையதளத்திலோ அல்லது என் மின் அஞ்சல் விலாசத்தின் (arulrajgl2011@gmail.com) மூலமாகவோ தெரிவிக்க வேண்டுமென்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.


ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்; 'எதுவுமே தனித்து விடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை.' ஏனெனில், ஆண்டவரின் வாய்மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது.” - எசாயா-34:16.



வாழ்க இறைத்தந்தை!
வாழ்க இறைமகன்!
வாழ்க தூய ஆவியார்! - ஆமென்.



உள்ளடக்கம்















No comments:

Post a Comment